[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நெகட்டிவ் மதிப்பெண் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

no-negative-marking-system-in-competitive-exams-madras-high-court

எந்தப் போட்டி தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நெல்சன் பிரபாகரன் என்பவர் 2013ம் ஆண்டு ஐஐடி பிரதான தேர்வு எழுதினார். அப்போது, மொத்தம் 72 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், அவருக்கு நெகட்டிவ் மதிப்பெண் என்ற அடிப்படை 25 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டது. அதனால், 47 மதிப்பெண்கள் மட்டும் அவர் பெற்றார். அட்வாஸ் தேர்வுக்கு நுழைய 50 மதிப்பெண்கள் தேவைப்பட்ட நிலையில், மதிப்பெண் குறைவாக உள்ளதாக கூறி அவர் நிராகரிக்கப்படுகிறார். 

இதனையடுத்து, நெகட்டிவ் மதிப்பெண்ணால், ஐஐடி அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி நெல்சன்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கனடா, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலுள்ள தேர்வுகளில் கூட நெகட்டிவ் மார்க் இல்லை என்று தம்முடைய மனுதாரர் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. விசாரணையின் போது அவரது விடைத்தாளை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், விடைத்தாளை ஆய்வு செய்த நீதிபதிகள் அதில் நியாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், எந்தப் போட்டி தேர்விலும் நெகட்டிவ் மார்க் கணக்கிடக்கூடாது என்று வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். சரியாக எழுதிய பதில்களுக்கான மதிப்பெண்ணை ஏன் குறைக்க வேண்டும்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close