[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

2019-20 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8 அன்று தாக்கல் 

tn-budget-to-be-filed-on-february-8

2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பிப்ரவரி 8 ஆம் தேதி பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

 2019ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று தற்காலிக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கபட்டுள்ளது. வருமான வரி நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு கீழ் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழ‌ங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். அதில் 2019-20ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, வரும் 8 ஆம் தேதி நிதித்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close