[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

“தேர்தலுக்காக கிராமங்களுக்குச் செல்லவில்லை” - மு.க.ஸ்டாலின்

m-k-stalin-comment-about-the-tn-govt

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஊழியர்களின் பிரச்னைகளைக் கண்டு கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  

Image result for திமுகஊராட்சிசபை

“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்”என்ற முழக்கங்களை முன்வைத்து , திமுக சார்பில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று தருமபுரி மாவட்டம் செட்ரப்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை, ஆட்சியாளர்கள் அழைத்துப் பேசவில்லை என்றும், மக்களைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை என்று குறைகூறினார்.  

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடப்பது ஆட்சியே கிடையாது என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். மேலும் தேர்தலுக்கான ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தவில்லை என்றும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது தனது கால் படாத தமிழக கிராமங்களே இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close