[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

“ 95% ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்”- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல் 

95-teachers-are-have-returned-to-school-says-directorate-of-school-education

95% மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 70% தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் (இன்று) காலை 9 மணிக்குள் பணிக்கு வரவில்லை என்றால், அந்த இடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 

Image result for பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

இந்நிலையில்  தமிழகம் முழுவதும்  95% மேனிலைப் பள்ளி ஆசிரியர்களும் 70% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் காலியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பள்ளிக்கு அருகில் உள்ள தகுதியானவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close