[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

‘நாளை காலை பணிக்கு வராவிடில் காலிப்பணியிடம்தான்’ - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

the-tamilnadu-government-has-announced-that-these-places-will-be-declared-as-galleans-in-the-absence-of-teachers-within-the-period-of-time

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஆசிரியர்கள் பணிக்கு வராவிடில் அந்த இடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நியமனம் செய்ய துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு சேரலாம் எனவும் எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், தொலைபேசி அல்லது நேரிலோ தெரிவித்துவிட்டு பணியில் சேரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆசிரியர்கள் பணியில் சேர நாளை காலை 9 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close