[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

நடைமுறை தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின் - தமிழிசை

tamilisai-soundrarajan-reply-to-mk-stalin-about-madurai-aiims

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதன் நடைமுறை சாத்தியம் தெரியாமல் பேசுகிறார் மு.க.ஸ்டாலின் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு அறிக்கை வாயிலாக தமிழிசை பதிலளித்துள்ளார். அதில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான நடைமுறைகளை அவர் விளக்கியுள்ளார். முதலில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை மாநில அரசு வழங்க வேண்டுமென்றும், அவ்வாறு தரப்படும் நிலத்திற்கு மத்திய அரசின் ஆய்வுக்குழு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

அதன்பின் நிதி ஒதுக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்ட பின்னரே பணிகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் திமுகவின் ஆ.ராசா மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்த போது அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போதுதான் இறுதி வடிவம் பெறுவதாக தமிழிசை கூறியுள்ளார். இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதின் நடைமுறை சாத்தியம் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close