[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

“பத்மஸ்ரீ விருது பெற்ற 7 பேருக்கு வாழ்த்துகள்” - கமல்ஹாசன்

kamalhassan-wishes-to-7-people-about-pathmasri-award

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு அறிவித்தார். 

இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர்ப் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது. பாரதரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார், மேசை பந்து விளையாட்டு வீரர் சரத் கமல், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ஆர்.வி.ரமணி, இசைத்துறையை சேர்ந்த ஆனந்தன் சிவமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி ஆகிய தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரவு தேவா, டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் மோகன்லால், விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷன் விருதும், நான்கு பேருக்கு பத்ம விபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close