[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

அரசியலுக்கு வரமாட்டேன் என்று அஜித் சொல்வது தீர்க்கமான முடிவு; பாராட்டுக்குரியது - சீமான் 

seeman-lashed-out-at-fans-for-involving-in-activities-like-erecting-banners-and-milk-pouring

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

நெல்லையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர் பேசிய அவர், அரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமானது என்று தெரிவித்தார். மேலும்  கல்வித்துறையில் தமிழகம் முதன்மையாக இருப்பதாக கூறும் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அவர்களது குழந்தைகளை அரசு கல்வி நிலையங்களில் ஏன் சேர்க்கவில்லை.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது தேவையில்லாதது . சுகாதாரத்துறையில் முதல் மாநிலம் என்றால் ஏன் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தனியாருக்கு கல்வி மருத்துவத்தை தாரை வார்த்து விட்டு தரமாக உள்ளது என பேசுவது பைத்தியக்காரத்தனமானது என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் காரணம் எனக்கூறுவது பைத்தியக்காரத் தனம், ஒரு போராட்டம் தொடங்குகிறது என்றால் பேசி தீர்க்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது. இது பொறுப்பற்ற ஆட்சி முறை இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளேன், யாரோடும் கூட்டணி இல்லை. இந்த நாட்டின் கட்டமைப்பு தவறாக உள்ளது. அதை மாற்ற வேண்டும், அதை முன் வைத்து தான் எங்கள் தேர்தல் பரப்புரை இருக்கும். விரைவில் தேர்தல் வர போகிறது. தற்போது எய்ம்ஸ் கொண்டு வருவது எவ்வளவு பெரிய ஏமாற்று. ஏன் இந்த 5 ஆண்டு பிஜேபி அரசு என்ன செய்தார்கள், இப்போது அடிக்கல் நாட்டி விட்டு அடுத்து நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம் என்பார்கள். இது ஏமாற்று வேலை என்றார்.

சிம்பு மீது பால் விற்பனை அதிபர் ஒருவர் வழக்கு கொடுக்கின்றார்.  பல ஆண்டுகளாக குடம் குடமாக பால் ஊற்றுபவர் மீது ஏன் வழக்கு இல்லை. செயல் பிரச்சனை இல்லை, செய்யுங்கள் என்று சொன்ன சிம்பு தான் பிரச்சனை. அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்வது தீர்க்கமான முடிவு. அஜித்தின் முடிவு மிகச் சரியானது, பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close