உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி சேலத்தில் கல்லூரி மாணவிகள் 23 ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலமாவு கொண்டு பிரம்மாண்டமான ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி சேலத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 23ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சின்னத்தை ஒவியமாக வண்ண கோலமாவு கொண்டு பிரம்மாண்டமான வரைந்தனர். அதனை சுற்றி கல்லூரி மாணவிகள் நின்றுகொண்டு பலூன்களை பறக்கவிட்டு பெண் குழந்தை பாதுகாப்பை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ரோகிணி, பலூன்களை பறக்கவிட்டார். மேலும், கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ரோகிணி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சதவீதம் ஆயிரம் ஆண்களுக்கு 916 பெண் குழந்தைகள் உள்ளன என்றார். எனவே பெண் குழந்தையின் சதவீதத்தை உயர்த்த பல்வேறு துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக சேலம் மாவட்டத்தில் தங்கமங்கை மற்றும் சக்தி குழு திட்டம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தோனி 5வது இடத்தில் விளையாட வேண்டும் - விவிஎஸ் லஷ்மண்
“கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்...” - சிவசேனா-பாஜக இடையே வார்த்தைப் போர்
மசூத் அசாரை நெருங்கும் இந்தியா : துணை நிற்கும் பிரான்ஸ்
“தேமுதிகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை” - ஸ்டாலின்
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே? - நெட்டிசன்கள் கேள்விகள்