தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே ஆலையை மீண்டும் திறக்க அனுமதிகோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருந்தது.
இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவிப்பதாக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி மின் விநியோகம் வழங்குவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தோனி 5வது இடத்தில் விளையாட வேண்டும் - விவிஎஸ் லஷ்மண்
“கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்...” - சிவசேனா-பாஜக இடையே வார்த்தைப் போர்
மசூத் அசாரை நெருங்கும் இந்தியா : துணை நிற்கும் பிரான்ஸ்
“தேமுதிகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை” - ஸ்டாலின்
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே? - நெட்டிசன்கள் கேள்விகள்