[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

“குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்” - பிரதமரை புகழ்ந்த அதிமுகவினர்

admk-party-members-wishes-pm-modi-for-madurai-aiims

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நிதி ஒதுக்கியதை பாராட்டும் வகையில் அவரை புகழ்ந்து அதிமுகவினர் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை புகழ்ந்து அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த எஸ்.பி. சண்முகநாதன் போஸ்டர் ஒன்றை அடித்து, சுவர்களில் ஒட்டியுள்ளார்.

Image result for Modi visit Tamil Nadu

அதில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட நிதி ஒதுக்கிய ‘குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்’ பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அடுத்த படியாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சருக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார். அந்தப் போஸ்டரில் ஜெயலலிதாவின் படமும் இருக்கிறது. 

Related image

இதற்கு முன் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக பலமுறை பேச்சுவார்த்தைகளும், ஆலோசனைகளும் நடத்திய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து அதில் எந்த வார்த்தைகளும் இல்லை. அவரது புகைப்படம் மட்டுமே உள்ளது. ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வைக்கவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற போஸ்டர்கள் அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமைவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close