[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..!” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்

cm-palanisamy-comment-about-karunanidhi-stalin-and-udayanidhi

திமுக என்பது குடும்பக் கட்சி என்றும், அதிமுக மக்கள் கட்சி என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார். 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், வேண்டுமென்றே அரசை திட்டமிட்டு குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை. மத்தியிலும் கூட்டணி ஆட்சியில் இருந்தார்கள். மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால் தமிழகம் முன்னேறவில்லை. அவர்கள் குடும்பம் மட்டும் முன்னேறியது. திமுக ஒரு குடும்பத்திற்கு தான் சொந்தக் கட்சி. ஆனால் அதிமுக மக்களுக்கு சொந்த கட்சி. 

அதிமுக கட்சியில் தான் தொண்டன் கூட எம்.எல்.ஏ-வாக, அமைச்சராக, முதலமைச்சராக கூட வரமுடியும். திமுகவில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அவருக்குப் பின்னர் ஸ்டாலின் முதல்வராக துடிக்கிறார். அது எப்போதும் நடக்காது. அவருக்குப் பின்னர் அவரது மகன் உதயநிதி கட்சிக்கு வர துடிக்கிறார். ஆனால் நான் விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு அவர்களிடம் கஷ்டம் தெரியும். மக்கள் வசதியாக வாழவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தார். அதிமுக ஆட்சியில் தான் சிறந்த கல்வி வழங்கப்பட்டது” என தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close