[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி : உலக சாதனை முயற்சி

pudukottai-viralimalai-jallikattu-attemp-to-world-record

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த போட்டிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கிவைக்க உள்ளனர். 

போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதையொட்டியும், பார்வையாளர்கள் ஏராளமானோர் அதிகாலை நேரத்திலேயே வந்திருப்பதால் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உலக சாதனை முயற்சியாக நடைபெறும் இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறையாக பொதுமக்களுக்கும் காப்பீடு செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close