[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் ! பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு

madras-high-court-directs-tnurb-to-recruit-pregnant-woman

காவலர் பணி உடற்தகுதிக்கான ஓட்டப் பந்தய தேர்வில் 30 விநாடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் தேவிகாவுக்கு பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2018 அக்டோபர் மாதம் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணி உடற்தகுதிக்கான ஓட்டப்பந்தயத்தில் தேவிகா என்ற கர்ப்பிணியும் கலந்து கொண்டார். 30விநாடிகள் தாமதமாக வந்ததால் அவர் உடற்தகுதியில் தேர்வாகவில்லை. இந்நிலையில் தான் 8 வார கருவுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டதாகவும், அதனால் தான் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அதனால் தன்னை அடுத்தக் கட்ட தேர்வுக்கு அனுமதிக்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

மேலும் தன்னுடைய பிரசவத்து பின், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விமலா, ''பெண் போலீசாருக்கு பதவி உயர்வு தேர்வு தொடர்பாக 2003 ஆம் ஆண்டு காவல் ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கர்ப்பிணியாக உள்ள காவலர்கள் மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்து, பிரசவத்துக்கு பின்னர் தனியாக உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

அந்த காவல் ஆணையரின் சுற்றறிக்கை அடிப்படையில் தேவிகாவுக்கும் பிரசவத்துக்குப் பின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை நடத்த வேண்டும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தேவிகாவுக்கு பணி வழங்க வேண்டும்’’ என்று உத்தவிட்டுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close