[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

தாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்

mother-raped-murder-and-daughter-killed-in-avadi-murderess-arrested

ஆவடி அருகே தாயும், மகளும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு வீட்டில், தனது குடும்பத்துடன் பெண் ஒருவர் வசித்து வந்தார். கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரம் செய்யும் அந்த பெண்ணின் கணவர், தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தனது 3 வயது பெண் குழந்தையுடன் அந்த பெண் வீட்டில் இருந்துள்ளார். அன்றிரவு யாரும் நினைத்துப் பார்க்காத அந்த சம்பவம் நடந்தேறியது. நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், அந்த பெண்ணை மிரட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

பின்னர், அந்த பெண் மற்றும் அவரின் 3 வயது குழந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு அந்த நபர் வீட்டில் இருந்து தப்பியுள்ளார். கொலை தொடர்பான தகவல் பரவியதும் அப்பகுதியே பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும், மோப்ப நாய் ஜான்சியும் வரவழைக்கப்பட்ட அதே வேளையில், சந்தேகத்தின்பேரில் வீரகுமார் உள்ளிட்ட 4 பேர், ஆவடி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு வெளியே ஓடி வந்த மோப்பநாய் ஜான்சி, அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆவடி காவல்நிலையத்தினுள் நுழைந்தது. கொலை தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாது என கூறிக் கொண்டிருந்த வீரக்குமாரை, யாரும் எதிர்பாராத விதமாக அந்த நாய் கவ்விப் பிடித்தது.

பின்னர் தனியாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தாய், மகளைக் கொலை செய்ததை வீரக்குமார் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு உடன்படாததால் அந்த பெண்ணையும், அதற்கு இடையூறாக இருந்ததால், அவரின் 3 வயது குழந்தையையும் கொலை செய்ததாக வீரக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை கைது‌ செய்துள்ள காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close