[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய மாநில ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் முகிலனை மீட்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“4 நாட்களில் 6.66 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்து துறை

above-6-lakh-people-travel-to-native-by-govt-bus-for-pongl-last-4-days

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து கடந்த 4 நாட்களில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசு சிறப்புப் பேருந்துகள் மூலம்‌ சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு என ஏறத்தாழ ஒரு வார விடுமுறையாக இப்பண்டிகை பார்க்கப்படுகிறது. இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம். 

இதனால், சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி ஜனவரி 11 முதல் 16 வரை சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களில், ‌6 லட்சத்து 66 ஆயிரத்து 70‌0 பேர் பயணம் செய்திருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் 5 இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, 12 ஆயிரத்து ‌93 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேர் சிறப்புப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்திரு‌ந்த நிலையில், அதன் மூலம் 8 கோடியே 26 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது. 

சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக, வரும் 17 ஆம் தேதியில் இருந்து, 20 ஆம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” என போக்குவரத்துத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close