[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கோடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

traffic-ramaswamy-moves-hc-seeking-cbi-probe-into-kodanad-video-case

கோடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. இதையடுத்து ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 5 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் பலியாயினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ‌சயான், மனோஜ், ’தெஹல்கா’வின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமு வேல் ஆகியோர் கடந்த 11ஆம் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் புகார் கூறினர். கோடநாடு கொலை- கொள்ளை தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து தமிழக போலீசாரால், சயான், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டனர்.

இதற்கிடையே, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி கோடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். 

''முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை கோடநாடு வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது, கோடநாட்டில் கொள்ளை மற்றும் இரட்டைக் கொலை நடந்த வழக்கை சாதாரண குற்ற வழக்காக கருதக் கூடாது, இதை அரசியல் நோக்கம் கொண்டதாக கருதலாம். ஜெயலலி தாவின் மரணம் சந்தேகத்துக்குரியதாக கருதப்படும் நிலையில் இவ்வழக்கை மிக தீவிரத்தன்மை கொண்டதாக பார்க்க வேண்டியுள்ளது'' என் று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக திகழும் நிலையில் வழக்கை மாநில காவல் துறையினர் நியாயமாக வும் நேர்மையாகவும் நடத்துவது கடினம் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close