[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்த ‘அம்மா’ - நெகிழ வைத்த நெட்டிசன் பதிவு

the-mother-who-went-singapore-to-see-her-son-sleep-near-some-things-to-wear-in-sun-lights

சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் படுத்திருப்பது போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. 

இன்றும் சென்னையில் வசித்து வரும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பலருக்கும் அரிசி முதல் மிளகாய்ப் பொடி வரை ஊரில் இருந்து அனுப்பி வைப்பதாகத்தான் இருக்கிறது. மாதம் ஒரு முறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ கட்டைப் பைகளில் மிளகாய்ப் பொடி, தேங்காய் எண்ணெய், தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் என அனைத்தையும் பிள்ளைகளில் தாய்மார்கள் நகரத்துக்கு சுமந்து வருவார்கள். மாத பட்ஜெட்டில் அந்த பிள்ளைகளுக்கு அது அவ்வளவு உதவியாக இருக்கும் என்பது மற்றொரு கதை. 

தன்னுடைய மகனுக்காகவோ, மகளுக்காகவோ நீண்ட நாட்கள் சிரமப்பட்டு ஒவ்வொன்றாக தாய் தயார் செய்வார்கள். ரேஷனில் கிடைக்கும் சர்க்கரை, உளுந்து போன்றவற்றையும் அவர்களுக்காக மாதந்தோறும் பேக் செய்துவிடுவார்கள். சென்னையிலேயே மகனும், மகளும் இருந்தாலோ அல்லது இரண்டு மகன்கள் இருந்தாலோ, தான் கொண்டு வரும் பொருளை எல்லோருக்கும் சமமாக பிரித்துக் கொடுப்பார்கள். 

             

அப்படியொரு தாய் தான் சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மகனை பார்க்க சென்றுள்ளார். அந்த தாய் மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்தப் பதவினை டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஷேர் செய்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார் இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல. அந்தம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கியும் உள்ளார். உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் அதை பதிவிட்டுள்ளனர். 

பார்க்க கொஞ்சம் மனது கஷ்டப்பட்டது. பெற்றோரை வரவழைக்கும் போது இது போன்ற செயல்களை தவிர்க்க அறிவுருத்துங்கள். பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கித்திண்ணும் நெட்டிசன்களுக்கு, வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம் கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாயன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணிணி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை” என்று உருவாக்கமாக கூறியிருந்தார்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close