[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பொங்கல் பண்டிகை விடுமுறை ! வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டிருக்கும்

vandalur-zoo-opens-on-pongal-holidays


பொங்கல் பண்டிகைக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 15 மற்றும் 16, 17 ஆகிய தேதிகளில் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை. ஆனால், ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை வருவதால், பொது மக்களுக்காக பூங்கா திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனத் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறைகள் வரும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்வது வழக்கம். 

இதற்காக, சென்னை வண்டலூரில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான உயிரியல் பூங்கா சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறது. பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும். 

அதேபோல, பார்வையாளர்களின் வசதிக்காக கூடுதலாக 20 நுழைவுச்சீட்டு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பார்வையாளர்கள் www.aazp.in என்ற இணையதளம் மற்றும் வண்டலூர் ஆப் மூலம்  நுழைவுச் சீட்டுகளை வாங்கலாம். 

அத்துடன் சுற்றுலா வருபவர்களின் வசதிக்காக இரண்டு கூடுதல் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் சாலையில் உள்ள கிரசெண்ட் கல்லூரி அருகேயும் விஜிபி திடலிலும் வாகனங்களை நிறுத்தலாம். இந்த வாகன நிறுத்துமிடங்களிலிருந்து பூங்காவுக்கு செல்ல இலவசப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் வண்டலூர் பூங்காவிற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தமிழக அரசு பூங்காவிற்கு வருபவர்கள் நெகிழி பொருட்கள், மதுபாட்டில்கள்,கரும்பு ஆகியவற்றை எடுத்து வரக் கூடாது என அறிவுறித்தியுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close