[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை

jallikattu-ban-in-dharmapuri

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அரசாணையில் தருமபுரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் நிகழ்ச்சிகளை ‌நடத்த அனுமதி வழங்கவில்லை. அதனால், அது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்‌ மலர்விழி தெரிவித்துள்ளார். மீறி நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும், தருமபுரி மாவட்டத்தில் சே‌வல் சண்டை, ரேக்ளா பந்தயத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வாடிவாசல் வழியாக களத்தில் இறங்க 276 காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. தை 1-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close