[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

ஜல்லிக்கட்டு போட்டியை நேரலையில் பார்க்க “மதுரை காவலன்”

jallikattu-has-been-live-in-madurai-kavalan-app

ஜல்லிக்கட்டு போட்டியை “மதுரை காவலன்” எனும் செயலி மூலம் நேரலையாக காணும் வசதியை மதுரை மாவட்ட காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.     

மதுரை மாவட்ட மக்களின் நலனுக்காக “மதுரை காவலன்” எனும் செயலி கடந்த 2017 டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஜல்லிக்கட்டு நேரடி ஒளிபரப்பு எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை ஆண்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்து ஜல்லிக்கட்டு போட்டியை நேரலையாக காணலாம்.

Image result for மதுரை காவலன்

அதோடு இந்த செயலியில், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம், அவசர உதவி எண்கள், அவசர மருத்துவ உதவி மையங்கள் போன்றவற்றின் தகவல்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை காண விரும்புபவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே பயன்படுத்துவோர் அதனை மேம்படுத்தினால் இந்த வசதியைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “MADURAI  KAVALAN” Madurai  District  Police  Youtube  LIVE மற்றும் Facebook LIVE  போன்றவற்றில் நேரடியாக பார்க்கும் வசதியும் செய்துதரப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close