[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

“ரஜினிகாந்த்தான் என்னை படிக்க வைத்தார்” - நெகிழும் இளைஞர் 

rajinikanth-paid-for-this-guy-s-education-he-is-now-repaying-thalaivar-by-designing-banners-for-his-films

எந்தவொரு விளம்பரத்தையும் எதிர்ப்பார்க்காமல் உதவிகள் செய்வதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். அவர் வெளியே சொல்லிக்கொல்லாமல் பல பேருக்கு கல்வி, மருத்துவம் மற்றும் மற்ற தேவைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் உதவி பெற்ற ஒருவர்தான் போஸ்டர் டிசைனர் மதி. இவர் பேனர் மற்றும் போஸ்டர் டிசைன் தொழில் செய்து வருகிறார். ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெரும்பாலானோர் இவரிடம் தான் பேனர் மற்றும் போஸ்டர் டிசைனிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் செய்த உதவிகள் குறித்தும் அவருடனான உறவு குறித்தும் டிசைனர் மதி மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னுடைய குடும்பம் மிகவும் ஏழை குடும்பம். எனது அம்மா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்து வந்தார். ரஜினி சார்தான் என்னுடைய படிப்புக்கு கட்டணம் செலுத்தினார். என்னுடைய தாத்தா குப்புசாமி துப்புரவு தொழில் செய்து வந்தார். அவர் அடிக்கடி போயஸ்கார்டன் பகுதியில்தான் வேலை பார்ப்பார். அவ்வபோது ரஜினி சார் வீட்டிலும் வேலை பார்ப்பார். அப்போது ரஜினி சார் பேப்பர் படித்துக்கொண்டே என் தாத்தாவிடம் பேசிக்கொண்டு இருப்பார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று ரஜினி சாரை குடும்பத்துடன் சந்திப்போம். அவர் எங்களுக்கு இனிப்பு மற்றும் புது ஆடைகள் வாங்கி கொடுப்பார். என் தாத்தாவின் வேலைக்காக பணம் கொடுப்பார் ரஜினிகாந்த். தாத்தா மூலம் தான் எனது அம்மா ரஜினி வீட்டிற்கு வேலைக்கு சென்றார்.” எனத் தெரிவித்தார்.

மேலும் மதி கூறுகையில், “ரஜினிகாந்துக்கு யாரும் காலில் விழுவது பிடிக்காது. ஒருமுறை தாத்தாவை அடையார் வீட்டிற்கு வர சொன்னார் ரஜினி. அப்போது நானும் தாத்தாவும் சென்றோம். அங்கு பென்ஸ் காரில் ரஜினி வெள்ளை வேட்டி சட்டையில் வந்தார். நான் சிறு பிள்ளையாக இருந்து பார்த்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென ரசிகர்கள் சிலர் ஆசிர்வாதம் வாங்க ரஜினி காலில் விழுந்தனர். உடனே ரஜினி சார் அவர்களை எச்சரித்தார். அந்தக் கூட்டத்தின் மத்தியில் எங்களை பார்த்ததும் மேலே வாருங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். மேலே சென்றதும் இனிப்பு கொடுத்து பார்த்து நீண்ட நாட்கள்  ஆகிவிட்டது என எங்களிடம் பேசிகொண்டிருந்தார்” எனத் தெரிவித்தார்.

மதி ரஜினி குறித்து தனது சுவாரஸ்ய தகவலை மேலும் பகிர்ந்து கொண்டார். “ஒரு நாள் நாங்கள் குடும்பத்துடன் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது ரஜினி சார் வீட்டில் இல்லை. வீட்டுக்காவலரிடம் லதா அம்மாவிடம் நாங்கள் வந்திருக்கிறோம் எனக் கூறுமாறு தாத்தா கூறினார். 

ஆனால் அந்தக் காவலர் முறையாக பதிலளிக்கவில்லை. லதா அம்மாவிடமும் சொல்லவில்லை. மாடியில் இருந்து பார்த்த லதா அம்மா எங்களை உள்ளே அழைத்து வீட்டு காவலரை கண்டித்தார். மேலும் என்னிடம் நன்றாக சிரித்து பேசினார். நல்லா படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ரஜினிகாந்த் செய்த உதவிகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் நல்லா படிச்சி இந்த நிலைக்கு வர ரஜினி சார்தான் காரணம். எனவே அவருக்கு நான் நன்றிக்கடனை திருப்பி செலுத்த வேண்டும். அவருடைய போஸ்டரை டிசைன் செய்வதில் பெருமை அடைகிறேன்” என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close