[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

விழாவின்றி எம்ஜிஆர் நினைவு வளைவை திறக்கலாம்- சென்னை உயர்நீதிமன்றம்

can-open-mgr-memorial-without-ceremony-chennai-high-court

விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் மெரினா சாலையில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

(நினைவு வளைவிற்கு அடிக்கல் நாட்டியபோது).

இதனிடையே எம்ஜிஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு அமைத்துள்ளோம். எனவே நினைவு வளைவு திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், “எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு கட்டியதை தவிர வேறென்ன செய்தீர்கள்? ஆண்டு முழுவதும் நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பேனர் வைத்தீர்கள். அவரின் கொள்கை, கருத்துகளை பரப்ப என்ன செய்தீர்கள்? பார்வையற்றோர் காதுகேளாதோர் நலனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு பள்ளிகள் திறந்தீர்களா? அல்லது ஏற்கெனவே உள்ள பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தீர்களா? இதுபோன்ற எந்த திட்டத்துக்காவது செயல்திட்டத்தை உருவாக்கிவிட்டு வாருங்கள். அதுவரை திறக்க அனுமதிக்க மாட்டோம்.” என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் அந்த நினைவு வளைவை பார்த்தால் எம்.ஜி.ஆர் பற்றிய நல்ல நினைவுகள் வருமென அரசு நினைப்பதில் என்ன தவறிருக்கிறது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர், அண்ணா நினைவாக நூலகம் கட்டியுள்ளார்கள். அதுபோல கட்டலாம். கல்வி, அறிவுத்திறன் வளர்ச்சிக்கு செலவிடலாம் என தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதிகள், சிவாஜி நினைவாக மணிமண்டபம் கட்டினார்கள். அதில் யார்? என்ன? பலனடைகிறார்கள்?? அதுகூட நீர்நீலை இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அத்துடன் விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close