[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தடை

rs-1000-pongal-gift-only-for-poverty-people

வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் சென்று இந்த பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ரேசன் கடைக்கு சென்று 1000 ரூபாய் பொங்கல் பரிசை குடும்ப அட்டைதாரர்கள் பெற்று செல்கின்றனர். இதனால் ரேஷன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழக அரசின் இந்த பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 பொங்கல் பரிசு வழங்கப்படுவது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீதிமன்ற உத்தரவால் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 கிடைக்காது.  அதேமசயம் 1000 ருபாய் மட்டுமே வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதே தவிர, அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கத் தடையில்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

அரசின் கொள்கை முடிவு என்றால் யாரும் கேட்க முடியாது என நினைக்கக் கூடாது என தெரிவித்த உயர்நீதிமன்றம் கட்சியின் பணம் என்றால் யாரும் கேட்கமாட்டார்கள். வரிப் பணம் என்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள் எனவும் தெரிவித்தது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close