[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவது உறுதி” - முதல்வர் பழனிசாமி

government-close-sterlite-permanently-cm-palanisamy

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் விவகாரத்தில் அமைச்சரவையைக் கூட்டி எந்தக் கொள்கை முடிவையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், கொள்கை முடிவு எடுக்குமாறு அரசுக்கு அவர் கோரிக்கையும் விடுத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அரசு உதவாது என்று கூறினார்.

இதன் பிறகு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். தொழிற்சாலைகளுக்கு எனத் தனிச்சட்டம் உள்ளதாகவும், அதை மீறி செயல்பட்டதால்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close