[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

தேர்தலை அறிவிக்கும் முன்பு தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டியவை என்ன?

what-should-election-commission-consider-before-announcing-election-date

ஒரு தொகுதிக்கான தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பு என்னென்ன காரணிகளையெல்லாம் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்...?

ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பது 6 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். தேர்தலை அறிவிக்கும் முன்பு, அந்த நேரத்தில் பொதுத் தேர்வுகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளனவா? இயற்கை பேரிடர்களுக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதா? இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றனவா? என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் முன்னாள் தேர்தல் ஆணையர்கள். கலவரங்கள் போன்ற அசாதாரண சூழல் உள்ளதா என்பதையும் கருத்தில் கொண்டே தேர்தல் தேதி முடிவு செய்யப்பட வேண்டும்.

இவை குறித்த மாநில அரசின் அறிக்கையை பெற்ற பிறகுதான் தேர்தல் குறித்த முடிவை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அதேபோல், பண்டிகைக் காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

திருவாரூர் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை உச்சநீதிமன்ற வழக்கொன்றில் 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பின்பு, இது போன்ற சிறப்புக் காரணங்களும், அது சார்ந்த கோரிக்கைகள் எழும்போது அதனை ரத்து செய்வதற்கான முழு அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு எனக் கூறப்படுகிறது.

முன்னதாக கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமை பெறாததை கருத்தில் கொண்டே திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையம், கடந்த டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர் எழுதியக் கடிதத்தில் உள்ள காரணங்களை சுட்டிக்காட்டி உள்ளது.

அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டம், இயல்புநிலைக்கு திரும்ப 3 மாதங்கள் ஆகும் என்பதால் ஏப்ரல் மாதம் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என்றும், அதே போல எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தால் காலியான 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டாம் என தலைமை செயலாளர் கேட்டு கொண்டது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close