[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கடன்கள் தள்ளுபடி... பரவிய வதந்தியால் குவிந்த மக்கள்..!

rumours-spread-out-about-loan-discount

கஜாவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று மனு அளித்தால் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வதந்தி பரவியதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குவிந்தனர்.

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், சுய உதவிக்குழுக்களின் கடன்கள், விவசாயக் கடன், நகை மற்றும் வர்த்தகக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் புகார் மனு அளித்திருந்தனர். அதனையடுத்து கடன்களை திருப்பி செலுத்த சுய உதவிக்குழுக்களுக்கு ஓராண்டும், விவசாய நிலங்களில் பாதிப்பிற்கு ஏற்றவாறு 1 முதல் 4 ஆண்டுகள் வரையும் கால அவகாசம் வழங்கி ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று மனு அளித்தால் அனைத்து வகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற வதந்தி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரவியது. அதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனையடுத்து கடன்கள் தள்ளுபடி என பரவிய செய்தி வதந்தி என மக்களிடம்  எடுத்துக்கூறி, அவர்களின் மனுக்களை அதிகாரிகள் பெற்று வருகின்றனர். நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை எனக் கூறியும் பலர் மனு அளிக்க வந்திருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close