[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

சென்னைக் காவல்துறைக்கு ஒருகோடிக்கு மேல் வழங்கிய மாநகராட்சி..!

chennai-corporation-gives-nearly-rs-1-crore-to-chennai-police

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை சிசிடிவி கேமரா பொருத்தும் பணிக்காக மாநகராட்சி வழங்கியுள்ளது.

சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உபயோகமற்ற ஏழாயிரத்து 875 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனங்களை அப்புறப்படுத்திய காவல்துறை அவற்றை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இரண்டு கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. அதில் 75 சதவீதம் காவல்துறையின் பங்களிப்பு தொகையாகும்.

அதன்படி ஒருகோடியே 60 லட்சம் ரூபாயை சென்னைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வழங்கினார். இந்தத் தொகை கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close