[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா
  • BREAKING-NEWS தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு
  • BREAKING-NEWS மாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

chance-for-rain-in-tamil-nadu-and-puducherry

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் ‌மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன்‌ காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட வானிலை ஆய்வு மையம், அதிகபட்சமாக வால்பாறையில் 9‌ சென்டி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக திண்டுக்கல், பண்ருட்டி, பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், அதிகபட்சமாக திருத்தணியில் 41 டிகிரி செல்சியசும், மதுரையில் 40 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை, வேலூரில் தலா 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close