[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தனிப்பட்ட கருத்து : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

o-panneerselvam-speak-about-minister-c-ve-shanmugam-opinion

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. மருத்துவர்களே சொன்னார்கள். அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்திருக்கலாமா? இல்லையா? ஆஞ்ஜியோகிராம் என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலும் 75 நாட்கள் மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என 3 மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்தது யார்? ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் என சொன்னது யார்? தவறான தகவலை சொன்னது யார்? தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர் யார்? அந்த மருத்துவமனையின் நோக்கம் என்ன? அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்? அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்யக் கூடாது, செய்தால் ஜெயலலிதா பிழைத்துவிடுவார் என நினைத்தது யார்? அந்த உண்மை தெரியப்பட வேண்டும்” என்றார்.

Image result for cv shanmugam

மேலும் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என பலமுறை சொல்லப்பட்டது. மத்திய அரசு ஜெயலலிதாவிற்கு தனி விமானம் தருகிறோம் என்றனர். ஆனால் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் உயிரை விட, இந்திய மருத்துவர்களின் கவுரவம் முக்கியம் என்ற ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் அடங்கியிருக்கிறது. அந்த மர்மம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்” என்று கூறினார்.

Related image

இதனைதொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்ததை வரவேற்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ள நிலையில், சி.வி.சண்முகத்தின் கருத்து தனிப்பட்ட கருத்து என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close