[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

‘டீ மாஸ்டரை போலீஸ் அடித்ததாக புகார்’ - வெளியான சிசிடிவி காட்சிகள்

nellai-dsp-hitting-tea-master-cctv-videos-shows

நெல்லையில் டீ மாஸ்டரை காவல்துறை டிஎஸ்பி ஒருவர் கண்ணத்தில் அரையும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் என்ற இடத்தில் தனியார் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டீ குடிப்பதற்காக நெல்லை புறநகர் டிஎஸ்பி முத்தமிழ், அவரின் பாதுகாவலர் பொன்பாண்டி மற்றும் காவலர் ஒருவர் வந்துள்ளனர். டிஎஸ்பியிடம் டீயை கொடுத்துவிட்டு, ஏதோ பேசிவிட்டு டீ மாஸ்டர் செல்கிறோர். இதையடுத்து அவரை அழைக்கும் டிஎஸ்பி, டீ மாஸ்டர் கண்ணத்தில் பலார் என்று 2 அறைகள் விடுகிறார். 

பின்னர் கடையில் வேலை செய்யும் மற்றொருவரை கூப்பிட்டு, பாதுகாவலர் பொன்பாண்டி ரூபாய் நோட்டைக் கொடுக்கிறார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளனர். இதுதொடர்பாக டிஎஸ்பி முத்தமிழை தொடர்பு கொண்டு கேட்டபோது, தாங்கள் முறையாக டீ குடிக்கவே அங்கு சென்றதாக தெரிவித்தார். ஆனால் டீ கொடுத்தவிட்டுச் சென்ற மாஸ்டர் ‘ஓசியில் டீ குடிக்க வந்துவிட்டார்கள்’ என்று முனங்கிக்கொண்டே சென்றதால், அவரை அடித்ததாக விளக்கமளித்துள்ளார்.

ஆனால் டீ மாஸ்டர் தரப்பில் கூறும் போது, “என்ன டீ இது” என்று கூறி அடித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனது சமூகத்தை கேட்டு காவலர்கள் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னை சுங்கச்சாவடி வரையிலும் காரில் ஏற்றிச்சென்று காவலர்கள் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close