[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

புத்தாண்டு அன்று போதையில் வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து

if-drive-with-drink-in-new-year-celebration-licence-will-be-cancelled-chennai-police-warned

புத்தாண்டு தினத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. 

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காவல்துறை விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள் தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்களில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

         

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் 
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தால் பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் போது சிரமம் ஏற்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

அதோடு,“மெரினா, சாந்தோம், காமராஜர் சாலைகளில் போலீஸ் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் மணலில் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தப்படும். பைக் ரேஸை தடுக்க 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகளில்368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

                   

கடற்கரையோரங்களில் குதிரைப்படைகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும். குற்றத் தடுப்பு நடவடிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 9 மணி முதல் முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close