[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

“நேர்மையில்லாத அதிகாரிகளை பணிநீக்குங்கள்”- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

dismiss-dishonest-officers-chennai-high-court-advice-to-tn-govt

நேர்மை, அர்ப்பணிப்பு மனப்பான்மை இல்லாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மண்ணடியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த கட்டடத்தின் உரிமையாளர் மெஹ்ரஜ் பேகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகளும், விதிமீறல் கட்டடங்களும் புற்று
நோய் போல் பரவி வருவதாக வேதனை தெரிவித்தனர்.

விதிகளை மீறுபவர்களை நீதிமன்றம் பாதுகாக்காது என்றும் மாநகராட்சி அதிகாரிகளின் உதவி இல்லாமல் இதுபோன்ற விதிமீறல்களில் யாரும் ஈடுபட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், நேர்மை, அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றாத அதிகாரிகள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எ‌ன அறிவுறுத்தினர்.

மாநகராட்சி அதிகாரிகள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை, அவர்களின் சொத்து விவரங்களை அவ்வப்போது ‌இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close