[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

விளை நிலங்களில் உயர் மின்கோபுரம்: தொடர் போராட்டத்தில் விவசாயிகள்

dharmapuri-farmers-hunger-strike-enters-5th-day

பென்னாகரம் அருகே விவசாய விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தும் காத்திருப்பு போராட்டத்தில், தொடர்ந்து 5வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எட்டியாம்பட்டியில் விவசாய விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கூட்டமைப்பினர் கடந்த 9 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை மீது அரசு உரிய கவனம் செலுத்தாததால், கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென விவசாயிகள் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் 2வது நாளில், மாலை 6 மணிக்கு ரவிக்குமார் என்ற விவசாயி உண்ணாவிரத பந்தலில் மயக்கமடைந்தார். தொடர்ந்து அவரை விவசாயிகள் பென்னாகரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் 3-வது நாள் போராட்டம் தொடங்கியதும், ஏரியூர் பகுதியை சேர்ந்த இராமமூர்த்தி என்ற விவசாயி மயக்கமடைந்தார். தொடர்ந்து இராமமூர்த்தியும் பென்னாகரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி இன்று 5-வது நாள் போராட்டம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் இருப்பதால் விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் மல்லையன் மற்றும் ராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்தில் மயக்கமடைந்த விவசாயிகளுக்கு தொடர்ந்து சிகிச்சயளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்று வரும் 5-வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் 3 பெண்கள் உட்பட 35 விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close