[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு

chandra-babu-naidu-criticized-central-government

தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாஜக அரசு இயக்கி வருவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன்பின் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்ற சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி, கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ராயப்பேட்டையில் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுக்கூட்டத்தில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடு, ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை பாஜக எழுப்பி வருகிறது. அத்துடன் தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாஜக அரசு இயக்கி வருகிறது.

சிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு அழித்துவிட்டது. மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலன் தரவில்லை. ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது” எனத் தெரிவித்தார். அத்துடன் தமிழ் மிக அழகான மொழி, அதை கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close