[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

உருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு

new-cyclone-formed-in-bengal-ocean-heavy-rain-will-fall-in-chennai

வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மா‌நிலம் மசூலிப்பட்டினத்தை நோக்கி நகரத் தொடங்கியது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘பெய்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இது ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை மறுநாள் பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மிதமான மற்றும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடலோரப் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசி வருகிறது. கடல் அலைகள் 15 அடி உயரம் வரை எழுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. புயல், கனமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் பழவேற்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close