[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

“எட்டுவழிச் சாலைக்கு 11% பேர்தான் எதிர்ப்பு” - முதலமைச்சர் பழனிசாமி

only-11-of-the-population-is-opposed-to-chennai-salem-green-way-road

சென்னை - சேலம் இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு 11% சதவிகிதம் மக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை-சேலம் எட்டுவழி சாலைக்கு தொடக்கம் முதலே பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பை குறைக்க மாற்றம் எடுத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்தது. மேலும் சென்னை டு சேலம் இடையேயான  8 வழி பசுமைச் சாலை திட்டம் முதல்கட்டமாக 6 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்தது. இது தொடர்பாக 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிக்கையும் அனுப்பியது.

மேலும் எதிர்காலத்தில் வாகனப் பெருக்கத்தை கணக்கில்கொண்டு 8வழிச் சாலையாக மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக திருத்தப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. எனினும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக கிராம மக்கள் அனைவரிடமும் பசுமை வழிச்சாலைக்கான கருத்து தெரிவிப்பு கூட்டமும் நடைப்பெற்றது.


 
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் எட்டுவழிச் சாலைக்கு 11% பேர்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு 89% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் 11% பேர்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Image result for edappadi palanisamy

மேலும் 30 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளில் 8,10 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டன. வெளிநாடுகளில் தொழில்வளம் பெருகி மக்கள் சிறப்புடன் வாழ்கிறார்கள். நம் நாட்டில் தற்போதுதான் 2, 4 வழிச்சாலைகள் அமைக்கப்படுகின்றன. தமிழக மக்கள் சிறப்புடன் வாழ வேண்டும் என்பதே அரசின் விருப்பம். யாரையும் பாதிப்புக்குள்ளாக்குவது அரசின் நோக்கம் அல்ல என்று தெரிவித்தார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது என்றும் அனைவரையும் சமாதானப்படுத்தித்தான் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close