[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

வறட்சியால் வாழை தோப்புகளை மேய்சலுக்கு விட்ட விவசாயிகள்

banana-groves-are-waste-in-dharmapuri

பாலக்கோடு அருகே ஏற்பட்டுள்ள வறட்சியால், வாழை தோப்புகள் நீரின்றி காய்ந்து போகும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் எப்பொழுதும் விவசாயிசம் செழிப்பாக நடைபெற்று வரும். இந்தப் பகுதியில் சின்னாறு அணை மற்றும் கேசர்குலியல்லா அணை அமைத்துள்ளது. பெரும்பாலும் மலைகளுக்கு இடையில் இருப்பதால், இந்த அணைகளில் எப்பொழுதும் தண்ணீர் தேக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த இரு அணைகளிலும் தண்ணீர் இருப்பதால், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, வெள்ளிசந்தை, பெல்ரம்பட்டி, திருமல்வாடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செழிப்பாக நடைபெறும்.

இந்தப் பகுதியில் நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி, வாழை மற்றும் காய்கறிகள், பூக்கள் உள்ளிட்ட அனைத்தும் தங்களது நிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால், சின்னாறு அணை தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அதேபோல், கேசர்குலியல்லா அணையும் நீரின்றி காணப்படுகிறது. இதனால் பாலக்கோடு பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 

மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, திருமல்வாடி, பெல்ரம்பட்டி, சீங்காடு, பெல்லுஅள்ளி உள்ளிட்ட பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த வாழைகள் குலை தள்ளி பழுக்கும் தருணத்தில் நீரின்றிபோனதால் விவசாயிகள் தங்களின்  கால்நடைகளை வாழை மரங்களை மேய்ச்சலுக்காக விடவேண்டிய அலவம் நடந்தேறியுள்ளது.மேலும் இதே நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close