[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

தீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு

fire-accident-near-vaniyambadi-mother-and-daughter-dead

வாணியம்பாடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததால் தாய், மகள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒன்றரை வயதில் தனலட்சுமி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் வழக்கம்போல நேற்று இரவு சாப்பாட்டை முடித்த சரஸ்வதி, தனது ஒன்றரை வயது மகளுடன் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். கணவர் வேலைக்கு சென்று தாமதமாக வந்ததால் வீட்டிற்கு வெளியேயே அவர் படுத்துவிட்டதாக தெரிகிறது. அதேபோல சரஸ்வதியின் மாமியாரும் அவரது வீட்டில்தான் தினசரி இருப்பார். ஆனால் நேற்றிரவு அவரும் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்றிரவு சரஸ்வதி தங்கியிருந்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சரஸ்வதியின் அலறல் சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடல் கருகிய சரஸ்வதி அங்கேயே உயிரிழந்து விட்டார். அதேசமயம் ஒன்றரை வயது தனலட்சுமி மீட்கப்பட்டார். 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனலட்சுமி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே வீட்டில் எரிந்துகொண்டிருந்த குத்து விளக்கில் இருந்து பரவிய தீதான் விபத்திற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. வீடும் கூரை வீடு என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்ததால் தாயும் சேயும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்கள்: இம்மானுவேல், செய்தியாளர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close