[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

தனித்தனி நுழைவு வாயிலால் சர்ச்சை... மன்னிப்பு கேட்டது ஐஐடி விடுதி நிர்வாகம்..!

chennai-iit-apologies-for-separate-canteen-controversy

சென்னை ‌ஐ.ஐ.டி‌யில் உள்ள உணவு விடுதியில் சைவம் மற்றும் ‌அசை‌வத்திற்கென தனித்தனி நுழைவு வாயில்கள் ‌அமைக்கப்பட்டிருப்பது ‌சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விடுதி விவகாரங்கள் செயலாளர் மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி. அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சமஸ்கிருத பாடல் பாடியது, மாணவர்கள் நடத்திய அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு தடை விதித்தது ஆகியவற்றை அதற்கு உதாரணமாக கூறலாம்.

அந்த வகையில் புதிதாக உருவாகியிருப்பதே, உணவு விடுதி சர்ச்சை. ஐ.‌‌ஐ‌.டி.யில் உள்ள தனியார் உணவு விடுதியில் சைவ, அசைவ நுழைவு வாயில்கள் மட்டுமின்றி, கை கழுவும் இடமும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த புகாரை வெளி கொண்டுவந்திருக்கின்றனர். ஐ.ஐ.டி‌யின் உணவு விடுதி கண்காணிப்புக் குழுவின் அறிவுறுத்தலின்படியே இந்த முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். நாடு போற்றும் கல்வி நிறுவனத்தில் நவீன தீண்டாமை நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தங்களது வளாகத்திற்குள் எந்த சாதி வேறுபாடும் இல்லையென ஐ.ஐ.டி. நிர்வாகம் கூறியது. மாணவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என முடிவு செய்வது அவர்களின் விருப்பம் எனவும், அதேபோல் எந்த உணவு விடுதியில் சாப்பிட வேண்டும் என்பதையும் மாணவர்களே முடிவு செய்கிறார்கள் என்றும் ஐ.ஐ.டி கூறியது. இதில் தாங்கள் தலையிடுவதில்லை என்றும் ஐ.ஐ.டி. நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, விடுதி விவகாரங்கள் செயலாளர் மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் நடந்த செயலுக்காக மன்னிப்பு கோரி மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். சிரமமின்றி மாணவர்கள் செல்வதற்காகவே தனி வழி அமைக்கப்பட்டதே தவிர, சாதி வேறுபாட்டிற்கு அல்ல என அவர் தெரிவித்துள்ளார். விடுதி உணவு வழங்கும் தனியார் நிறுவனம் கேட்டதாலேயே, இத்தகைய முடிவில் ஈடுபட்டதாகவும், விடுதி கண்காணிப்புக் குழு எந்த அறிவுறுத்தலையும் இது தொடர்பாக வழங்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close