[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

சென்னை ஐஐடியில் சைவ ‌உணவு சாப்பிடுவோருக்கு தனி நுழைவாயில்

separate-entrance-for-vegetarian-and-nonvegetarian-in-iit-m-restaurant

சென்னை ‌ஐ.ஐ.டி‌யில் உள்ள உணவு விடுதியில் சைவம் மற்றும் ‌அசை‌வத்திற்கென தனித்தனி நுழைவு வாயில்கள் ‌அமைக்கப்பட்டிருப்பது ‌சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி. அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சமஸ்கிருத பாடல் பாடியது, மாணவர்கள் நடத்திய அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு தடை விதித்தது ஆகியவற்றை அதற்கு உதாரணமாக கூறலாம். 

       

அந்த வகையில் புதிதாக உருவாகியிருப்பதே, உணவு விடுதி சர்ச்சை. ஐ.‌‌ஐ‌.டி.யில் உள்ள தனியார் உணவு விடுதியில் சைவ, அசைவ நுழைவு வாயில்கள் மட்டுமின்றி, கை கழுவும் இடமும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது. 

         

ஐ.ஐ.டி‌யின் உணவு விடுதி கண்காணிப்புக் குழுவின் அறிவுறுத்தலின்படியே இந்த முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். நாடு போற்றும் கல்வி நிறுவனத்தில் நவீன தீண்டாமை நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close