[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

‌15ஆவது சட்டப்பேரவை கூடியது: முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்‌கள் பதவியேற்பு

tamilnadu-15-assembly-mlas-take-oath

தமிழகத்தின், 15ஆவது சட்டமன்ற பேரவைக்கு தேர்வாகியுள்ள எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு, தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டப்பேரவை தேர்தல் 16ஆம் தேதி நடைபெற்று, புதிய அரசு கடந்த 23ஆம் தேதி பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு, 15ஆவது தமிழக சட்டமன்ற பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு தேர்வான அனைத்து எம்.எல்.ஏக்களும் அவைக்கு வந்திருந்தனர். முதலில், முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இவரைத் தொடர்ந்து, சட்டப்பேரவை திமுக குழு தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். இவரைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா அவையில் இல்லை. இவர்களைத் தொடர்ந்து, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதேநாளில், அவை முன்னவர், துணை சபாநாயகர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close