[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் 

the-protest-against-struggle-to-open-water-in-kiruthumaal-river

வைகை நதியின் குறுக்கே உள்ள முள்ளிப்பள்ளம் தடுப்பணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்கக்கோரி மதுரை-விரகனூர் சுற்றுவட்டச் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image result for கிருதுமால் நதி

வைகை நதியின் குறுக்கே உள்ள முள்ளிப்பள்ளம் தடுப்பணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்கக்கோரி மதுரையில் 3 மாவட்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருதுமால் ஆறு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 54 கிலோ மீட்டர் வரை பாய்கிறது. மேலும் கிருதுமால் ஆற்றுப் பாசானத்தால் 18,500 ஏக்கர் விளைநிலம் பயன்பெறுகிறது. 

Image result for கிருதுமால் நதி

இந்நிலையில் மதுரை-விரகனூர் சுற்றுவட்டச்சாலையில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் என 3 மாவட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் மற்றும் கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றார். அப்போது கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடாத பொதுப்பணித்துறையை கண்டித்தும், அரசுக்கும் எதிராக போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர்.

மேலும் கிருதுமால் நதிக்கு தண்ணீரை பெறுவது தங்களது உரிமை எனவே இதற்காக தமிழக அரசு அரசாணையை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே சாலைமறியல் போராட்டத்தால் மதுரை-விரகனூர் சுற்றுவட்டச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close