[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

டாஸ்மாக் மற்றும் பள்ளிக்கு செல்ல ஒரே விளம்பரப் பலகை !

school-banner-wording-creates-controversy-with-tasmac-ad

அறந்தாங்கி அருகே அரசுப்பள்ளிக்கும், டாஸ்‌மாக் கடைக்கும் சேர்த்து ஒரே விளம்பர பலகை வைக்கப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது பெருங்காடு கிராமம். அங்குள்ள வேங்கூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் பெருங்காடு, குன்னூர், பள்ளத்திவயல், மேல்மங்கலம், தொண்டைமானேந்தல், காரணியேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அனைவரும் டாஸ்மாக் கடையை கடந்து தான் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் அரசுப்பள்ளிக்கும், டாஸ்‌மாக் கடைக்கும் சேர்த்து ஒரே விளம்பர பலகை வைக்கப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியாகக்கூட பலகை வைக்காமல் பள்ளிக்கு செல்லும் வழி என வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையிலேயே, டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழி என தற்போது எழுதப்பட்டுள்ளது. விளம்பர பலகையில் சீருடையுடன் மாணவிகள் புகைப்படமும், மதுபாட்டிலுடன் இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதனால், அதிருப்தியடைந்துள்ள மக்கள், உடனடியாக விளம்பர பலகையை அகற்றுவதுடன், டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இரண்டு முறை போராட்டம் நடத்தியதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வரும் 12-ம் தேதி மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close