[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

தமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

chance-for-rain-in-tamilnadu

தமிழகத்தில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் மாறி தொடர்ந்து தீவிரமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Image result for வறண்ட வானிலை

மேலும்  தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Image result for வறண்ட வானிலை

இதனிடையே வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இதுவரை போதிய அளவில் பெய்யவில்லை. சென்னையிலும் இதுவரை வழக்கமான அளவை விட குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்று சென்னை வாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close