[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி உதவி

udhayanidhi-stalin-seeks-relief-for-gaja-affected-area

மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 

மேலும் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கஜாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த விவசாயிகள், பொதுமக்கள் என எல்லோரையும் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு மக்களின் பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் குரல் எழுப்பப்படும் என்று தெரிவித்தார். 

மேலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளையும் வழங்கிய போது முன்னாள் அமைச்சர் ரகுபதி, எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close