[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

பென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி : திடுக்கிடும் புகார் 

fraud-in-the-name-of-pennycuick-at-theni

முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் பெயரால் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. 

Image result for Mullaperiyar

முல்லைப்பெரியாறு அணை என்பது தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குக் ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன்பு இராணுவப் பணிப் பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தவர். அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் ஒருபுறம் தென் மாவட்ட மக்கள் தண்ணீர்ப் பிரச்னையால் வாடுவதையும் மறுபுறம் பெரியாற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் பார்த்து, ஆற்றின் குறுக்காக ஒரு அணையைக் கட்டலாம் என்று ஆங்கில அரசிடம் அனுமதி பெற்றார். பின் பாதி கட்டப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அணை உடைந்து ஆங்கில அரசு திட்டத்தை மூட்டை கட்டினாலும் இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையெல்லாம் விற்று அணையைக் கட்டி முடித்தார்.

Image result for பென்னி குக்

இன்றளவும் அவர் பெயரைச் சொல்லி பொங்கல் வைக்கும் அளவுக்கு அன்பும் நன்றியும் பாராட்டுகிறார்கள் தென்மாவட்ட மக்கள். இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் பென்னி குக்கின் கொள்ளு பேரன் பேத்திகள் என டயானா ஸிப், ஸானி மற்றும் உறவினர்கள் என்று சிலர் தேனிக்கு வந்தனர்.ஆனால், இவர்கள் யாரும் பென்னி குக்கின் நேரடி வாரிசுகள் அல்ல என்பதும் இவர்களில் ஒருவர் மட்டும் பென்னிகுக்கிற்கு தூரத்து சொந்தம் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

Image result for Fraud peenycuick

கம்பம் அருகே உத்தமப்பாளையம் பகுதியைச் நேர்ந்த சந்தன பீர் ஓலி என்பவர், லண்டனைச்சேர்ந்த டயானா ஸிப் உள்ளிட்ட 3 பேரும் பென்னிகுக்கின் கொள்ளு பேத்திகள் என்று கூறி அறிமுகப்படுத்தி அழைத்து வந்ததோடு, லண்டனில் உள்ள பென்னிகுக் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையை சீர்செய்யவும் அங்கு பென்னிகுக்கிற்கு நினைவுச்சிலை எழுப்பவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக கூறுகிறார்கள் கம்பம் பகுதி மக்கள். இந்நிலையில்  பென்னிகுக்கின் பேத்திகள் என்று நம்பி தாங்கள் உதவி செய்ததாக கூறுகிறார்கள் அந்த நிகழ்ச்சிக்கு உதவி புரிந்தவர்கள்.

Related image

இதனைதொடர்ந்து கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி தேனி கம்பம் பகுதியில் பென்னி குக்கின் பெயரில் நிதி வசூல் செய்தநிலையில், கொடைக்கானலில் பென்னிகுக் ட்ரஸ்ட் என்ற பெயரில் இதே சந்தன பீர் ஒலி என்பவர் பென்னிகுக்கின் நிலத்தை அபகரிக்க, முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார். மேலும் 1‌980 வரை பென்னி குக் பெயரில் கொடைக்கானலில் இருந்த 21 ஏக்கருக்கும் அதிக நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிர்ச்சித்தகவலை கூறுகிறார். இச்சுழலில் கம்பம் பகுதி மக்களின் புகார்கள் குறித்து லண்டனில் வசிக்கும் சந்தன பீர் ஒலியிடம் கேட்டபோது இந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் மறுப்பு தெரிவித்தாலும், பென்னிகுக்கின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளார் கோவிந்தன்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close