[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது

sarkar-movie-issue-admk-threatened-vijay-fans-arrested-by-central-police-in-chennai

விஜய் ரசிகர்கள் எனக்கூறி அரிவாளுடன் பேசியவாறு வீடியோ வெளியிட்டு, அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி படம் தீபாவளியன்று வெளியானது. படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தினர். 

அத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இந்தக் காரணத்தை முன்வைத்து, தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் ஒரு பரபரப்பான சூழ்நிலையே உருவானது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. 

இதற்கிடையே விஜய் ரசிகர்கள் ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிக்கு ஆதரவாக தங்களது வீடுகளில் உள்ள, தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச பொருட்களை எரியும் தீயில் போட்டு கொளுத்தினர். அதையும் மீறி இளைஞர்கள் இருவர், விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளுடன் அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதன்பின்னர், அரிவாளோடு அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த இருவரையும் கைது செய்ய தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வந்தது. அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் 23452348, 23452350 என்ற எண்களில் மக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம் என தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டது. 

இந்நிலையில் வீடியோவில் இருந்த ஒருவரையும், வீடியோ எடுத்தவரையும் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் வீடியோவில் நடித்தவர்கள் எண்ணூரை சேர்ந்த சஞ்சய் மற்றும் லிங்கதுரை என்பது தெரியவந்துள்ளது. 

அத்துடன் வீடியோவை எடுத்தவர் வடபழனியை சேர்ந்த அனிஷேக் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சய் மற்றும் அனிஷேக் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய அரிவாள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவு தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close