[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

வெளிமாநில இளம்பெண் கும்பகோணத்தில் பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது

delhi-woman-raped-in-kumbakonam

வெளிமாநில இளம்பெண் கும்பகோணத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானை சொந்த ஊராக கொண்ட இளம்பெண் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டெல்லியில் வசித்து வந்த இவருக்கு சமீபத்தில் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து பணியில் சேர்வதற்காக தமிழகம் வந்தார் சுதா. சென்னையிலிருந்து ரயில் மூலம் கும்பகோணம் சென்ற அவர் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். இதனையடுத்து தங்குவதற்கான இடத்திற்கு செல்ல ரயில் நிலையம் அருகே நின்ற ஆட்டோவை வாடகைக்கு பிடித்துள்ளார். அந்த ஆட்டோக்காரர் சுற்றுப்பாதையில் செல்வதை உணர்ந்த சுதா உடனடியாக தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒரு இருட்டான இடம் அருகே சுதாவை இறக்கிவிட்டு வேகமாக ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

இதன்பின் கையில் வைத்திருந்த டிராலியுடன் என்ன செய்வதென்று தவித்திருக்கிறார் சுதா. அந்த நேரத்தில் அங்கு பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் சுதாவை வலுக்கட்டாயமாக அங்கிருந்த இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவர்களை தவிர கூடுதலாக இரண்டு பேர் சேர்ந்துகொண்டும் சுதாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து ஆட்டோவை பிடித்து அவர்கள் சுதாவை வழியனுப்பி வைத்துள்ளனர். அந்த நேரத்தில் அப்பெண்ணோடு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒரு இளைஞரும் ஆட்டோவில் சென்றுள்ளார். சுதாரித்த இளம்பெண் ஆட்டோவின் எண்ணை மனப்பாடம் செய்துகொண்டார். அறைக்கு சென்ற பின்னர் நடந்தவற்றை தோழிகள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தார் சுதா. இதனையடுத்து சுதாவின் பெற்றொர்கள் உடடினயாக கும்பகோணம் வந்தனர். அத்துடன் காவல்நிலையத்திலும் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் ஆட்டோ எண்ணை வைத்து அவரை தேடி கண்டுபிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close