[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“மேகதாது அணை மத்திய அரசின் சதி” - ஸ்டாலின் குற்றச்சாட்டு

mk-stalin-vaiko-thirumavalavan-comment-about-bjp-in-trichy

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு செய்கை சதி செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சியில் போராட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கஜா புயலால் பாதிக்கப்‌பட்ட தமிழகத்திற்கு பிரதமர் மோடி வராதது ஏ‌ன் எனக் கேள்வி எழுப்பினார். இந்தச் சூழலில் தமிழகத்தில் தாமரை எப்படி மலரும் எனக் கேள்வி எழுப்பிய அவர், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் செய்கையில் சதி நடப்பதாகவும் கூறினார். கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும்‌, அதற்கு ஏதுவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குதான் பாதுகாப்பு கவசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் அரசியல் அடிப்படையிலேயே இருப்பதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, உச்சநீதிமன்றம் மற்றும் காவி‌ரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தங்கள் அணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் எனத் தெரிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்படாமல் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது என்றும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close